Home » Ghost voters » ஜனாதிபதித் தேர்தல்களிலான தபால் மூல வாக்களிப்பு

 

postal_votes

படம்: 1982ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் அளிக்கப்பட்ட தபால் மூல  வாக்குகளின் எண்ணிக்கையால் மாவட்டங்கள் நிழல் படுத்தப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்களிப்பிலான சந்தேகத்துக்கிடமான அதிகரிப்பு

1982ம் ஆண்டுக்கும் 2015ம் ஆண்டுக்கும் இடையில் சனத்தொகையானது வெறும் மூன்றிலொரு பங்கால் (20.5 மில்லியன்களுக்கு)  அதிகரிக்கும் போது இக்காலப்பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் அளிக்கப்பட்ட தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை 10  மடங்குகளாக (1.1 மில்லியன்) அதிகரித்துள்ளது. பின்வரும் விடயங்களையும் கவனிக்கவும்.

  • 1999ம் ஆண்டுக்கு முந்திய பதினாறு வருடங்களில் தபால் மூல வாக்குகள் 50 வீதத்தால் அதிகரித்த போது‚ அடுத்து வந்த ஆறு வருடங்களில் அது 300 வீதம் அதிகரித்துள்ளது.
  • 1999ம் ஆண்டுக்கு முன்னர்‚ அரச ஊழியர்களில் 20 வீதத்துக்கும் குறைவானோரே தபால் மூல வாக்களிப்பு வாய்ப்பினைப்  பயன்படுத்தினர். அப்போது முதல் இவ்விகிதாசாரம் இரட்டிப்பாகி மேலும் நான்கு மாவட்டங்களில் 60 வீதத்தையும் தாண்டிவிட்டது.
  • ஆயுதப் படைகளில் சுமார் 200 – 240‚000 வரையிலான ஆட்களின் அதிகரிப்பு‚ தபால் மூல வாக்குகளின் அதிகரிப்பின் ஒரு பங்கை விளக்குகிறது. ஆனாலும் முற்றுமுழுதான அதிகரிப்புக்கான விளக்கமில்லை
  • 2009ம் ஆண்டுக்குப் பின்னர் ஆயுதப் படையினரின் எண்ணிக்கை நிலையானதாக இருந்த போதும். தபால் மூல வாக்குகள் தொடந்தும் அதிகரித்தே வந்திருக்கின்றது.

பத்து மடங்கு அதிகரிப்பதற்கான சில காரணங்கள் விளக்கப்பட முடியுமாயினும்‚ சில மாவட்டங்களில் இந்த அதிகரிப்பானது பெரிதும்  சந்தேகத்திற்குரியதாகும். நாம் தபால் மூல வாக்குகளில் கவனம் செலுத்தியமைக்கான காரணம் வாக்கு மோசடி இடம் பெற முடியுமான  வழிகள் குறித்து மதிப்பீடு செய்தலாகும். முடிவு யாதெனில்‚ தபால் மூல வாக்குகளிலான மோசடி எப்படியும் 03 இலட்சங்களைத்  தாண்ட மாட்டாது என்பதாகும்.

சந்தேகத்திற்கிடமான வாக்காளர்களின் எழுச்சி

இலங்கை தேர்தல் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 15 மில்லியனாக இருந்த போதும் வாக்களிக்க முடியுமானவர்களின் எண்ணிக்கை 14.2 மில்லியன் மட்டுமே ஆகும். மிகுதி வடக்கு‚ மேற்கு மாகாணங்களில் காணப்படும் குறைவான பதிவுகளில் மறைந்துள்ளது. இது தொழில் நிமித்தம் காரணமாக வெளிநாடுகளுக்கு இடப்பெயர்ந்தோரின் கவனக்குறைவினால் பதிவுசெய்யப்படாத பகுதியாகும். 2014ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் 1 முதல் 2 மில்லியன் வரையிலான ” சந்தேகத்திற்கிடமான மர்ம வாக்காளர்கள்” காணப்பட்டனர். (இது சம்பந்தமான விளக்கங்களுக்கு 2012 ஜூன் 15 கலம்போ டெலிகிராப் – கலாநிதி  லக்சிரி பிரனாந்து மற்றும் 2015 ஜூன் 06 – இஸட் எல். மொஹமட் ஆகியோரின் கட்டுரைகளைப் பார்க்கவும்)

இந்த 1 முதல் 2 மில்லியன் வரையான “மர்ம வாக்காளர்களை “ வாக்காளர் பட்டியலுக்கு  சேர்த்துக்கொண்ட பிறகு மர்ம வாக்காளர்களை வழிநடத்துபவர்கள் அந்த வாக்குகளை எப்படியாவது  மாவட்ட வாக்கு எண்ணிக்கை நிலையங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்​. தபால் மூலமான வாக்களிப்பின் போது சாதாரண  வாக்களிப்பில் ​ உள்ள அளவு கண்காணிப்பு காணப்படாமையினால் இலகுவாக மர்ம வாக்களிப்பு இடம்பெறலாம்.

தபால் மூல வாக்களிப்பு

தபால் மூல வாக்களிப்பு என்பதன் மூலம் எதிர்பார்க்கப்படுவது‚ தேர்தல் காலத்தில் ”அத்தியாவசியமான கடமைகளில்“ ஈடுப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்கள் (மற்றும் வேறு சிலர்) ஆகியோருக்காக வாக்களிக்க வழங்கப்படும் வாய்ப்பு ஆகும். தாம் ஈடுபடும் அத்தியாவசியமான சேவை என்ன என்பதை முடிவெடுக்க வேண்டியது அரச ஊழியர்கள் ஆகும். தபால் மூல வாக்களிப்பிற்கு முன்னாயத்தமாகவே விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் என்ற அடிப்படையில் பதிவு செய்தல் தொடர்பான தகவல்கள் அவர்களின் சேவை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தபால் மூல வாக்களிப்பு  தமது சேவை நிலையத்தில் அல்லது  சில அரச சேவை நிலையங்களில் இடம்பெறும். சாதாரணமாக தபால் மூல வாக்களிப்பு என்பது சாதாரண வாக்கெடுப்பிற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னதாகவே நடைபெறும். சில நேரங்களில் தமது சேவை நிலையங்களில் வாக்களிக்க முடியாது போன சேவையாளர்களுக்காக கச்சேரிக்கு சென்று வாக்களிக்க மற்றுமொரு தினம் வழங்கப்படும். தபால் மூல வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவிடத்து சாதாரண வாக்கெடுப்பின் போது வாக்களிக்க முடியும்.

முன்பு தபால் மூல வாக்களிப்பு நிலையங்கள் 1200 ஆக காணப்பட்டது. சில வாக்களிப்பு நிலையங்களில் இருந்து சுயாதீன கட்டுப்பாட்டு அதிகாரிகளும் பிரதிநிதிகளும் வாக்குப் பெட்டிகளை வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்வர்.

2015 ஜனாதிபதி தேர்தலிலான வாக்களிப்பு

தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பித்த 629‚000 விண்ணப்பதாரிகளில் 60‚000 விண்ணப்பதாரர்கள் தேர்தலில் போலியாக வாக்களிக்க முயற்சித்ததாகவும் தேவையான படிவங்களை பிழையின்றி பூரணப்படுத்துவதில் தோல்வியுற்று இருந்ததாகவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். (2015 ஜூலை 2ம் திகதி சன்டே டைம்ஸ் பார்க்கவும்) தம்மிடமுள்ள தேசிய அடையாள அட்டை தரவு காரணமாக  ஒரு தடவைக்கு மேல் வாக்களிக்க முயற்சிக்கும் பலர் இருப்பதை உறுதி செய்து கொள்ள தேர்தல் ஆணையாளருக்கு முடியுமாக இருக்கும்.

இதனூடாக அரச ஊழியர்கள் சிலரிடம் காணப்படும் முட்டாள்தனம்‚ நியாயமின்மை நிரூபிக்கப்படுகின்றது. 2014ம் ஆண்டுக்கான பட்டியலிற்கமைய தபால் மூல வாக்காளர்களின் எண்ணிக்கை ஜனவரி 525‚000 ஆக காணப்பட்டதோடு நடைப்பெறும் பாராளுமன்றத் தேர்தலுக்காக 567‚000 மாக அதிகரித்துள்ளது. க.பொ.த. உயர்தர பரீட்சை தொடர்பான சேவையில் ஈடுபடுபவர்களுக்காக மேற்கண்ட அதிகரிப்பு ஏற்பட்டிருக்கலாம். 2014 நடுப்பகுதியிலிருந்து ஜனதிபதி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் எவரையும் இணைத்துக்கொள்ள முடியாத போதும் ஒரு சில ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள்‚ இறந்தவர்கள்‚ ஆயுதப்படையினர் உள்ளடங்களாக வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேற்கண்ட 8 வீதமான அதிகரிப்பு சாத்தியமான போதும் சந்தேகத்திற்கிடமளிக்கின்றது.

தபால் மூல மோசடியான (மர்ம) வாக்காளர்களை பரிசீலனை செய்தல்

தபால் மூலமான வாக்களிப்பு மற்றும் சாதாரண வாக்களிப்பின் போது ஒருவரால் பல வாக்குகள் அளிக்கப்படுவதை இல்லாதொழிப்பதற்கு தேர்தல் ஆணையாளர்‚ ஆட்சி உறுப்பினர்கள் தங்கள் ஊழியர்களை கண்காணிக்க வேண்டும். எது எவ்வாறாயினும் சில தபால் மூல வாக்காளர்கள் சாதாரண வாக்கெடுப்பின் போது மற்றவர்களுக்காக பிரவேசிக்க முடியுமாக உள்ளது. கை விரல்களில் மை தீட்டுதல்‚ பல வாக்கு சாவடிகளில் அல்லது பல மாவட்டங்களில் ஒரே தடவையில் பங்களித்தல் போன்றவற்றிலுள்ள சிரமம் எதுவும் மற்றவர்களின் வாக்களிப்பை பயன்படுத்தும் 6 இலட்சம் தபால் மூல வாக்காளர்களுக்கு பாதகமாக அமைவதில்லை. தேசிய அடையாள அட்டையை பரீட்சித்தல் மூலம் போலி ஆவணங்களைக் கொண்டு ஒரு நபர் பலமுறை வாக்களிப்பதை தடுக்க முடியும். வாக்கு மோசடிகளை அடையாளம் காண்பதற்கு ஆதரவு வழங்குமாறு அனைத்து குழுக்களிடமும்‚ தனிநபர்களிடமும் தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தபால் மூல வாக்களிப்பில் இடம்பெறும் மோசடிகளை ஊக்குவித்தல்\

2015 பாராளுமன்ற தேர்தலுக்காக தபால் மூலமாக வாக்களிக் விண்ணப்பித்த 60‚000 விண்ணப்பங்கள் தேர்தல் திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவை நிராகரித்தல் தவிர்ந்த வேறு எந்த தண்டனையும் நடைமுறையில் கொண்டு வரப்படவில்லை. அரசியல் அமைப்பின் 99 (4) ம் பிரிவு ” ஒரு தேர்தல் மாவட்டத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் ஒரு நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பினும் அந்நபருக்கு ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்”.

உண்மையில் ஒரு வாக்காளர் இரண்டு முறை பதிவு செய்யப்படுவது வாக்காளர் பதிவு செயல்பாட்டில் இடம்பெறும் தவறுகளை இல்லாதொழிப்பதற்காக மட்டுமேயாயினும் இது மோசடியார்களுக்கு விடப்படும் அழைப்பாகின்றது. 20வது திருத்த சட்டம் மூலம் மேற்கண்ட இடைவெளியை தொடர்ந்து மேற்கொள்ள நம்பிக்கை இருப்பதை நினைவில் வைக்கவும்.

மாவட்ட அடிப்படையில் தபால் மூல வாக்களிப்பு அதிகரித்தல்

மாவட்ட அடிப்படையில் நோக்கும் போது 1994 ல் குருநாகல்‚ கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மர்ம வாக்களிப்பு அதிகரித்திருப்பதைக் காணலாம். 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கிடையில் குருநாகல்‚  அநுராதபுரம்‚  பொலன்னறுவை ஆகிய இடங்களில் தபால் மூல வாக்களிப்பு காணப்பட்ட போதும்‚ கேகாலை‚ கண்டி‚ பதுளை ஆகிய  மாவட்டங்களிலும் அளவுக்கு மீறிய தன்மையில் மர்ம வாக்காளர்களின் வளர்ச்சி காணப்படுகின்றது. 2010 ஆம் ஆண்டில் மேற்கண்ட அனைத்து மாவட்டங்களிலும் அவ்வளர்ச்சி தொடர்ச்சியாகக் காணப்பட்ட போதும் இரத்தினபுரி‚ காலி‚ மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. மேற்கண்ட இடஞ்சார்ந்த வளர்ச்சியை நோக்கும் போது 1999ம் ஆண்டில் மேலதிகமான மோசடிகள் இடம்பெற்ற மாவட்டமாக குருநாகல் காணப்பட்டது. அதன் பின் இடம்பெற்ற தேர்தல்களின் போது அம் மோசடிகள் மற்றைய மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது.

postal_vote_new_pic2

 

 

படம்: 1999 முதல் 2015ம் ஆண்டு வரை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் தபால் மூல வாக்களிப்பு அரச ஊழியர்களின் சதவீதம் வரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்குகளின் சதவீதம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆண்டுகளுக்காக அரச ஊழியர்களின் எண்ணிக்கை கிடைக்கக்கூடியதாக இருந்தமையால் நாம் அந்த தரவுகளை தேர்தல் ஆண்டுகளில் இடைச்செருகலாக சேர்த்துள்ளோம்.

அந்த அந்த மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள மர்ம வாக்காளர்களின் வளர்ச்சி என்பது அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினால் ஏற்பட்டிருக்குமா என்பதை பரீட்சிப்பதற்காக‚ தபால் மூல வாக்களிப்பு மற்றும் அரச ஊழியர்களின் எண்ணிக்கைக்கு இடையிலான விகிதங்களை எமக்கு ஆராய்ந்து பார்க்க முடியும். இரண்டாவது படத்தில் காட்டப்பட்டிருப்பது 1999 ல் வாக்களிப்பு மற்றும் அரச ஊழியர்களுக்கிடையிலான கூடிய சதவீதம் குருநாகல் மாவட்டத்தில் காணப்படுவதாகும். எவ்வாறாயினும் 2010 ல் கூடிய சதவீதம் காட்டப்பட்டிருப்பது பொலன்னறுவையாக இருந்தப் போதிலும் அதன் பிறகு திருகோணமலை‚ அநுராதபுரம்‚  மாத்தளை மாவட்டங்களிலும் காணப்படுகின்றது. 2015ல் பொலன்னறுவையின் சதவீதம் சந்தேகப்படக் கூடிய முறையில் குறைந்துள்ளதோடு கூடிய சதவீதம் திருகோணமலை‚ அநுராதபுரம்‚ மாத்தளை‚ குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் காணமுடிகின்றது. இந்த வளர்ச்சியின் ஒரு பகுதி படையினரின் வருகையினால் இடம்பெற்றிருக்க கூடும். மற்றைய அரச ஊழியர்கள் மற்றும் பணியாளர்களோடு ஒப்பிடுகையில் இராணுவத்தினருக்கு( 60 முதல் 70 வீதம் வரையானோர்) தபால் மூல வாக்களிப்பிற்காக பதிவு செய்ய கோரிக்கை வைக்க முடியும்.

தேசிய அளவில் தபால் மூல வாக்களிப்பின் வளர்ச்சி மூலம் சுமார் 200‚000 ஆயுத சேவைகள் உருவாக்கப்பட்டது. படையினரின் எண்ணிக்கை குறைந்துள்ளப் போதிலும் 2009ம் ஆண்டுக்கு பின் இடம்பெற்றுள்ள தபால் மூல வாக்களிப்பில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி புரிந்துக்கொள்ள முடியாதுள்ளது.

2015 ஜனாதிபதி தேர்தலின் போதான மாவட்ட அளவிலான வாக்களிப்பின் வடிவங்கள்

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்‚  சவாலாக அமைந்தவர்களை பார்க்கும் போது வேட்பாளர்களுக்கிடையில் ஒற்றுமை இருப்பதைக் காணமுடிகின்றது. (வரைப்படத்தை பார்க்கவும்) வாக்காளர்களின் வரவு கூடிய மட்டத்திற்கு வளர்ச்சியடைந்துள்ளது. இருக்கும் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்கும் மாவட்டங்களில் வாக்களிப்பதற்காக கூடுதலான வாக்காளர்கள் வருகைத் தரும் போக்கைக் காணக்கூடியதாக உள்ளது. சாதாரணமாக அச்செயலின் மூலம் புலனாவது வாக்கு மோசடியாகும். இங்கு சாதாரண வாக்காளர்களைப் போல் அல்லாமல் தபால் மூல வாக்காளர்களின்  வாக்கு பயன்பாட்டின் வரம்பு குறைந்துள்ளது. (2015 மே கலம்போ டெலிகிராப் – இஸட் எல் மொஹமட்.        www.slelect.net   இணையத்தளத்திலும் பார்க்க) அதன்படி இங்கு இடம்பெற்ற வாக்களிப்பு சந்தேகத்திற்கு இடமளித்த போதும்‚ தெரிவான ஜனாதிபதிக்காக கூடுதலான மோசடியான வாக்களிப்பு இடம்பெறவில்லை என கருத முடிகிறது.

Untitled3

வரைப்படம் – இப்படத்தில் காட்டப்படுவது தேர்தல் திணைக்களத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாக்களிப்பதற்காக வருகை தருபவர்களின் எண்ணிக்கை சிறிசேனவை விட ராஜபக்ச பெற்றுள்ள கூடுதலான வாக்கு சதவீதம் ஆகும். வை அச்சில் காட்டப்படுவது இருக்கும் ஜனாதிபதி (ராஜபக்ச) மற்றும் சவால் வேட்பாளர் (சிறிசேன) பெற்ற வாக்குகளுக்கிடையிலான வித்தியாச சதவீதம் ஆகும். எக்ஸ் அச்சில்  பதிவுத்தபால் மூலம் வாக்களித்துள்ளோரை காட்டுகிறது.

மர்ம வாக்குகளை பிரதிபலிக்கும் மாவட்டங்கள்

1982 தொடக்கம் 2015 வரை பார்க்கும் போது அரச ஊழியர்கள் கூடுதலாக இருப்பது கொழும்பு மாவட்டத்திலாகும். இருப்பினும் 2015ல் கொழும்பு மாவட்டத்திலும் பார்க்க கூடுதலான தபால் மூல வாக்காளர்கள் இருக்கும் மாவட்டங்கள் எட்டு உள்ளன. குருநாகல்‚ திருகோணமலை‚ யாழ்ப்பாணம்‚ கம்பஹா‚ கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு உரிய அவதானிப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளது. அநுராதபுரம்‚ கண்டி மற்றும் மாத்தளை ஆகியன சந்தேகத்திற்குரியவைகளாகும்.

குருநாகல் – 1999 தொடக்கம் இன்று வரை எந்தவொரு தண்டனைக்கும் உட்படாமல் வாக்கு மோசடி இடம்பெற்றிருப்பதும்‚ தபால் மூல வாக்காளர்கள்‚ மர்ம வாக்காளர்கள் இருப்பதும் குருநாகலில் ஆகும். உண்மையாக தபால் மூல வாக்களிப்பினூடாக மோசடிகள் இடம்பெற்றிருப்பின் மர்ம வாக்காளர்களின் 40 வீதம் அதன்படி விபரிக்க முடியும்.

திருகோணமலை – அரச ஊழியர்களுக்கான கூடுதலான தபால் மூல வாக்களிப்பிற்கான உயர்ந்த விகிதம் இங்கு உள்ளது. இங்குள்ள மக்கள் நிலைமைகளின் கீழ் இம்மாவட்டத்தில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பது வரையறைக்கு உட்பட்டது என ஊகிப்பது சரியா? அப்படியாயின் தபால் மூலமான வாக்கு கூடிய எண்ணிக்கையில் இருப்பதற்கான காரணத்தை விளக்குவது எவ்வாறு? 2015 பாராளுமன்ற தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன் கந்தளாயில் காணப்பட்ட மோசடியான 15‚000 வாக்கு சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை‚ திருகோணமலை தபால் மூல வாக்களிப்பு நிலையத்திற்கு அங்கீகாரமற்ற முறையில் உள்நுழைந்த காரணத்திற்காக பிரதி அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டமை இதற்கு உதாரணங்களாகும்.

யாழ்ப்பாணம் – 2015 ல் யாழ்ப்பாணத்தில் தபால் மூல வாக்களிப்பு வியக்கத்தக்க முறையில் அதிகரித்தது ஏன்? இது வாக்களிப்பிலான இடர்பாடுகளை அகற்றுவதினாலா? அப்படியாயின் தபால் மூலமான வாக்கு அரச ஊழியர்களுக்கிடையிலுள்ள 60 வீதமான விகிதங்களை பற்றி விளக்கமளிப்பது எவ்வாறு?

– யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்படுபவர்களில் இராணுவத்திற்கு உள்வாங்கப்படுவது குறைந்த பகுதியினரே என ஊகிக்க முடியுமா?

– யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியவர்கள் அல்லது குடி பெயர்ந்தவர்கள் பற்றிய மதிப்பீடுகள் இருக்குமா?

– 2009 க்கு பின் அதிகாரிகள் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதன் மூலம் விளக்கமளிக்க முடியுமா?

– 2010 தேர்தலுக்காக 2008 இலிருந்து நடைப்பெற்ற வாக்காளர் பட்டியலை பயன்படுத்தியமை

கம்பஹா – வயது அடிப்படையில் வாக்களிக்க தகுதிப் பெற்றவர்களை விட குறைந்த வாக்காளர்கள் பதிவு செய்யப்படுதலை காணக்கூடிய போதிலும்  மூல வாக்காளர்களின் எண்ணிக்கை வியக்கத்தகு முறையில் வளர்ச்சியடைந்துள்ளது. 1999 க்கு பின் வளர்ச்சியடைதல் பரந்துள்ளதோடு விசேடமாக 2010 க்கு பின் அவ்வளர்ச்சி தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது. இது 2015 தேர்தலுக்காக பசில் ராஜபக்சவினால் போசாக்கூட்டப்பட்ட மாவட்டமாகும்.

கொழும்பு – அரச ஊழியர்கள் கூடுதலாக காணப்பட்ட போதிலும் தபால் மூல வாக்காளர் அடிப்படையில் 25 மாவட்டங்களில் 9வது இடமே கொழும்பிற்கு கிடைக்கின்றது. கொழும்பில் இராணுவத்திற்கு உள்வாங்கப்படுதல் வியக்கத்தகு முறையில் குறைந்ததில் இன்னும் விளக்கமளிக்க முடியும்.

பொலன்னறுவை – 2010 ல் தபால் மூல வாக்கு அரச ஊழியர்களுக்கிடையிலான கூடுதலான விகிதங்கள் காணப்படும் இம்மாவட்டம் 2015 ல் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இவ்வாறு நடந்தது‚ ஒரு தலைவர் எதிர் கட்சிக்கு சென்றமையினால் ஏற்பட்ட வாக்கு மோசடியினாலா?

களுத்துறை. இரத்தினப்புரி‚ மொனராகலை‚ நுவரெலியா‚ ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் தபால் மூல வாக்களிப்பு உயர்ந்த போதிலும் மர்ம முறையிலான வாக்குகள் ஒப்பீட்டளவில் குறைந்தே காணப்படுகின்றது.

நாம் கற்றுக்கொண்டது என்ன?

தபால் மூல வாக்கு 10 மடங்கினால் அதிகரிப்பதற்கு கீழ்வரும் காரணங்களினால் வரையறுக்கப்பட்டுள்ளது.

– தேர்தல் தொகுதி அல்லது வாக்குத் தொகுதி மட்டத்தில் தேவையான தரவு இல்லாதிருத்தல்

– இராணுவ படையினரின் பதிவு தொடர்பான பட்டியல் மாவட்ட மட்டத்தில் இல்லாதிருத்தல்

– நடைமுறைகள்‚ கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் இல்லாதிருத்தல்

– அரசாங்க நிறுவனங்களின் பல்வேறுப்பட்ட நுண்ணறிவு

கொடுக்கப்பட்ட தரவுகளில் சுட்டிக்காட்டப்படுவது‚

– மர்ம வாக்காளர்களின் எண்ணிக்கை கூடுதலாக காணப்படும் மாவட்டத்தில் தபால் மூல வாக்கு அசாதாரண நிலையில் அதிகரித்துள்ளது. இருப்பினும் மர்ம வாக்காளர் அதிகமாகவுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தபால் மூல வாக்களிப்பு அதிகமாக இல்லை

– தபால் மூலம் வாக்களிப்பு அதிகரிப்பிற்கு பொறுப்பு கூற வேண்டியது குறைந்தளவான மர்ம வாக்களிப்பு எண்ணிக்கைக்கு மட்டுமே. கூடுதலாக எடுப்பின் மர்ம வாக்காளர்களுக்காக 2 முதல் 3 மில்லியன் வரையான வாக்களிப்பு பயன்படுத்தப்பட்டிருப்பினும் அது 10 முதல் 20 மில்லியன் வரையான வரம்பில் மதிப்பீடுகள் இருந்தன.

– வழக்கத்திற்கு மாறான அதிகளவிலான தபால் மூல வாக்குப்பதிவின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. 1999 ல் இது குருநாகல் மாவட்டத்தில் ஆரம்பித்த போதும் தேர்தலுக்கு தேர்தல் வளர்ச்சியடைந்து ஏனைய மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது.  வடக்கை காட்டிலும் மிதமான வளர்ச்சியில் தபால் மூல வாக்களிப்பு இரண்டாம் இடத்தைப் பெறுகின்றது.

– குருநாகல்‚ அநுராதபுரம்‚ மாத்தளை‚ திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தபால் மூல வாக்காளர்களின் விரைவான அதிகரிப்பு மர்ம வாக்காளர்களின் வளர்ச்சியுடன் தொடர்புடையதாகும்.

– இதற்கு விதிவிலக்காக  திருகோணமலை‚ யாழ்ப்பாணம். கம்பஹா என்பன காணப்படுகின்றன. இம்மாவட்டங்களில் கூடுதலான வாக்காளர் மோசடி இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கு சாத்தியம் உண்டு.

இம்முயற்சியை மெருகேற்றுவதற்கு ஒவ்வொரு வாக்காளரும் பங்களிக்கலாம் என நம்பிக்கை ஏற்படுகின்றது. இம்முயற்சியானது இலங்கையிலுள்ள தன்னார்வத் தொண்டர்களின் கூட்டு முயற்சியால் இடம் பெறுகின்றது. பங்களிப்பிற்கான வழிமுறைகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.(www.slelect.net )  இதற்கான மேம்படுத்தல்களை  (via @slelect or by email to mail@slelect.net )மின்னஞ்சல் வழியாகப் பெறலாம்.

See more at: http://en.slelect.net/88#sthash.jtyUcVS2.dpuf

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

கட்டுமான கீழ் உள்ள வலைதளம்

WEBSITE UNDER CONSTRUCTION

Connect With Us

Visit Us On TwitterVisit Us On Facebook

புதுப்பித்தல் அறிவிப்புகளுக்கு பதிவு செய்க